‘மக்கள் நம்பிக்கையை அவமதிக்காதீர்’: உ.பி கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘மக்கள் நம்பிக்கையை அவமதிக்காதீர்’: உ.பி கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

சாஜஹான்பூர்: உத்தரபிரதேச மாநிலம், சாஜஹான்பூர் மாவட்டத்தில், கிசான் கல்யாண் என்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். கடந்த 3 வாரங்களில் உத்தரபிரதேசத்தில் பிரதமர் உரையாற்றும் 5வது பொதுக்கூட்டமாகும்.

மாநிலத்தில், 80 எம்பி ெதாகுதிகள் இருப்பதால், உத்தரபிரதேசத்துக்கு மோடி சிறப்பு வியூகம் வகுத்து செயல்படுவதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் பிரதமர் மோடி  பேசியதாவது:
மத்திய பாஜ அரசு விவசாயிகளுக்கு முக்கியத்துவம் தருகிறது.

அதனால், கரும்பு விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவும் பல திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். நீங்கள் விளைவிக்கும் கரும்புகளில் கிடைக்கும் லாபம் அனைத்தும் உங்களுக்கே சேர்கிறது.

 சர்க்கரைக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

கடந்த ஆட்சியில் விட்டுச் செல்லப்பட்ட தடைகளை உடைத்து வருகிறோம். நாங்கள் பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தி வருகிறோம்.


கடந்த காலங்களில், சர்க்கரை ஆலைகள் தான் பணத்தை கொடுத்து வந்தன. விவசாயிகள் நினைத்தால் மண்ணில் இருந்து தங்கம் கூட எடுப்பார்கள்.

அவர்களுக்கு தண்ணீர் மட்டும் வேண்டும். நாங்கள் கிராமங்களுக்கு மின்சாரத்தை கொண்டு வந்த போது, பல கட்சிகள் எங்களுக்கு எதிராக பேசத் தொடங்கின.

கடந்த 70 ஆண்டுகளாக கிராமங்களில் மின்சாரம் போய் சேராததற்கு, முந்தைய அரசுகள் பொறுப்பு இல்லையா? மக்கள் என்னை நம்புகின்றனர்.

ஆனால், சில அரசியல் கட்சிகள் என்ன நம்பவில்லை என்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததற்கு என்ன காரணம் என்று கேட்டுக் கொண்டே இருந்தேன். ஆனால், அவர்களால் ஒரு திருப்திபடுத்தும் பதிலைக் கூட கூற முடியவில்லை.

மக்களின் நம்பிக்கையை அவமதிக்காதீர்கள் என்று நான் அவர்களிடம் திரும்பத் திரும்பக் கூறிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


.

மூலக்கதை