பரிசில் முதன் முறையாக சிறியரக முச்சக்கர வண்டிகள்! - புதிய சேவைகள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிசில் முதன் முறையாக சிறியரக முச்சக்கர வண்டிகள்!  புதிய சேவைகள்!!

பரிசில் புதிதாக சிறிய ரக, ஒருவர் மட்டுமே பயணம் மேற்கொள்ளக்கூடிய முச்சக்கர வண்டிகள் வெள்ளோட்டம் விடப்பட்டது. 
 
hoverkart என அழைக்கப்படும் இந்த சிறிய ரக முச்சக்கர வண்டி, பின் பகுதியில் இரண்டு சிறிய சக்கரங்களும், முன் பகுதியில் ஒரு சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் அமர்ந்திருந்து மட்டுமே பயணிக்க முடியும், தவிர வாகனத்தின் கட்டுப்பாடுகள் அனைத்தும் கைபிடி பகுதியில் அமைந்திருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் பரிஸ் மக்களுக்கு விரைவில் வாடகைக்கு வர உள்ளது. ஒரு மணிநேரத்துக்கு 30 கி.மீ வேகத்தில் பயணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   
 
முதல்கட்டமாக 25 வாகனங்கள் வாடகைக்கு வர உள்ளது. வாடகைக்கு பெற விரும்புவர்களுக்கு சில நிமிட பயிற்சிகளும் வழங்கப்படும். தவிர ஒரு மணி நேரத்துக்கு €59 யூரோக்கள் கட்டணமாக அறவிடப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. முதல்கட்டமாக பரிஸ் 9 ஆம் வட்டாரத்தில் இந்த  முச்சக்கர வண்டி சேவைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

மூலக்கதை