நிறுவன சட்டத்தில் திருத்தம் செய்ய திட்டம் : 83 கிரிமினல் பிரிவுகளை மாற்ற பரிசீலனை

தினமலர்  தினமலர்
நிறுவன சட்டத்தில் திருத்தம் செய்ய திட்டம் : 83 கிரிமினல் பிரிவுகளை மாற்ற பரிசீலனை

புதுடில்லி: நிறு­வ­னங்­கள் தொடர்­பான குற்­றங்­களில், 83 கிரி­மி­னல் பிரி­வு­களை, சிவில் பிரி­வு­க­ளாக மாற்ற, மத்­திய அரசு திட்­ட­மிட்­டுள்­ளது. நிறு­வ­னங்­களின் நிர்­வாக நடை­மு­றை­களில், பல்­வேறு விதி­மீ­றல்­கள் தொடர்­பாக, ஏரா­ள­மான வழக்­கு­கள் தேங்­கி­யுள்ளன.
அவற்றை குறைக்­கும் நோக்­கில், 2013 – நிறு­வ­னங்­கள் சட்­டத்­தில் திருத்­தம் செய்­வது குறித்து ஆராய, மத்­திய அரசு, உயர்­மட்­டக் குழு ஒன்றை அமைத்­துள்­ளது.
குற்­றப் பிரிவு : மத்­திய நிறு­வன விவ­கா­ரங்­கள் துறை செய­லர், இன்­ஜெட்டி ஸ்ரீனி­வாஸ் தலை­மை­யில், 10 உறுப்­பி­னர்­க­ளை கொண்ட இக்­குழு, நிறு­வ­னங்­கள் சட்ட விதி­களை மீறி, நிர்­வா­கி­க­ளுக்கு அளிக்­கும் அதிக ஊதி­யம் உட்­பட, 83 கிரி­மி­னல் குற்­றங்­களை, சாதா­ரண குற்­றப் பிரி­விற்கு மாற்­று­வது குறித்து பரி­சீ­லித்து வரு­கிறது.இது குறித்து, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:தற்­போது, நிறு­வ­னங்­கள் நிர்­வாக பொறுப்­பு­களில் உள்­ளோ­ருக்கு வழங்­கும் ஊதி­யத்­திற்கு வரை­யறை உள்­ளது. இது தொடர்­பான விதி­மீ­ற­லுக்கு வழங்­கும் தண்­டனை பிரி­வில், மாற்­றம் செய்­யப்­படும் என, தெரி­கிறது.ஒரு நிறு­வ­னம், நிகர லாபத்­தில், 11 சத­வீத அள­விற்கே, முழு நேர இயக்­கு­னர்­க­ளா­க­வும், நிர்­வாக இயக்­கு­னர்­க­ளாக உள்­ளோ­ருக்­கும் ஊதி­யம் உள்­ளிட்ட ஊக்­கத் தொகை வழங்­க­லாம். இது, நிர்­வாக இயக்­கு­னர்­க­ளாக இல்­லா­மல், முழு நேர இயக்­கு­னர்­க­ளாக மட்­டும் உள்­ளோ­ருக்கு, 1 சத­வீ­த­மாக உள்­ளது.ஒரு நிர்­வாக இயக்­கு­னர் அல்­லது முழு நேர இயக்­கு­னரை கொண்ட நிறு­வ­னங்­கள், நிகர லாபத்­தில், 5 சத­வீ­தத்­திற்கு மிகா­மல், ஊதி­யம் வழங்­க­லாம். இது, ஒன்­றுக்கு மேற்­பட்ட இயக்­கு­னர்­கள் உள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு, 10 சத­வீ­த­மாக உள்­ளது.அதிகாரம்இது போன்ற பல்­வேறு அம்­சங்­களில், விதி­மீ­றல் நிறு­வ­னங்­கள் மீது, தேசிய நிறு­வ­னங்­கள் சட்ட தீர்ப்­பா­யத்­தின் கீழ் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கிறது.இவற்­றில், சில சாதா­ரண குற்­றங்­களை விசா­ரிக்­கும் அதி­கா­ரம், மத்­திய நிறு­வன விவ­கா­ரங்­கள் துறைக்கு வழங்க, உயர்­மட்­டக்­குழு பரிந்­து­ரைக்­கும் என, தெரி­கிறது.மிக­வும் முக்­கிய குற்­றங்­களை மட்­டும், தேசிய நிறு­வ­னங்­கள் சட்ட தீர்ப்­பா­யம் விசா­ரிக்­கும் வகை­யில், நிறு­வ­னங்­கள் சட்­டத்­தில் திருத்­தம் செய்­யப்­ப­ட­லாம்.அடுத்து, நிறு­வ­னங்­களில் நடை­பெ­றும் முறை­கே­டு­க­ளுக்கு, தனி இயக்­கு­னர்­களை கிரி­மி­னல் குற்­ற­வா­ளி­யாக ஆக்­கு­வது குறித்த சட்­டப் பிரி­வி­லும் திருத்­தம் செய்ய, உயர்­மட்­டக் குழு பரிந்­து­ரைக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இது­போல, சிறைத் தண்­ட­னை­யு­டன் அப­ரா­தம் அல்­லது அப­ரா­தம் விதிக்­கக்­கூ­டிய குற்­றப் பிரி­வு­களின் கீழ் பதிவு செய்­யப்­படும் வழக்­கு­களின் தன்மை குறித்­தும் குழு ஆரா­யும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.வழக்குகள் தேக்கம்இந்­தாண்டு ஏப்­ரல் நில­வ­ரப்­படி, தேசிய நிறு­வ­னங்­கள் சட்ட தீர்ப்­பா­யத்­தில், 9,073 வழக்­கு­கள் நிலு­வை­யில் உள்ளன. அவற்­றில், திவால் நட­வ­டிக்­கை­யின் கீழ், 2,511 வழக்­கு­கள்; இணைத்­தல் மற்­றும் கைய­கப்­ப­டுத்­து­தல் தொடர்­பாக, 1,630 வழக்­கு­கள் அடங்­கும். இதர குற்­றங்­களின் பேரில், 4,932 நிறு­வ­னங்­கள் மீதான வழக்­கு­கள் நிலு­வை­யில் உள்ளன.

மூலக்கதை