‘ரசிக வர்ணனையாளர்கள்’ .... ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வாய்ப்பு

தினகரன்  தினகரன்
‘ரசிக வர்ணனையாளர்கள்’ .... ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வாய்ப்பு

சென்னை: சமூக ஊடகங்களில்  ஐபிஎல், டிஎன்பில் கிரிக்கெட் போட்டிகளை தொடரும் ரசிகர்களில் இருந்து தொலைக்காட்சி வர்ணனையாளர்களை தேர்வு செய்கிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல். ஐபிஎல், டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் ஒளிபரப்பி வருகிறது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் தமிழ் வர்ணனையும் இடம்பெறுகிறது. இந்திய அணிக்காக விளையாடிய ஸ்ரீகாந்த், வி.பி.சந்திரசேகர், எல்.சிவராமகிருஷ்ணன், பத்ரிநாதன், ஹேமங் பதானி,  ஸ்ரீதர் ஸ்ரீராம் மற்றும் தொலைக்காட்சிகளில் காமெடி நிகழ்ச்சி நடத்துபவர்கள் வர்ணனை செய்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த கிரிக்கெட் போட்டிகளை முகநூல்,  டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பின் தொடரும் ரசிகர்களுக்கு, வர்ணனை செய்யும் வாய்ப்பை அளிக்க ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் முடிவு செய்துள்ளது. இதற்காக  சென்னை, திருச்சி, மதுரை, கோவையில் இருந்து தலா 2 ரசிகர்களை தேர்வு செய்துள்ளனர். இவர்கள் இனி வரும் டிஎன்பிஎல் போட்டிகளில் இணைந்து வர்ணனை செய்வார்கள். சிறப்பாக வர்ணனை செய்யும் 2 ரசிகர்கள் தேர்வு செய்யப்பட்டு டிஎன்பிஎல் இறுதிப் போட்டியில் வர்ணனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அடுத்து வரும் தொடர்களிலும் பயன்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.

மூலக்கதை