சென்னையில் புரோ பேஸ்கட்பால்

தினகரன்  தினகரன்
சென்னையில் புரோ பேஸ்கட்பால்

சென்னை: புரோ பேஸ்கட்பால் லீக் தொடரின் 4வது சுற்று சென்னையில் இன்றும் நாளையும் நடக்கிறது.  இந்த தொடரில் சென்னை ஐகான்ஸ், மும்பை ஹஸ்லர்ஸ், டெல்லி ஹூப்பர்ஸ், கொல்கத்தா வாரியர்ஸ், சண்டிகர் பீஸ்ட்ஸ்,  ஜெய்பூர் ரீகல்ஸ், அய்ஸ்வால் லெஜண்ட்,   அகமதாபாத் விங்கர்ஸ், பெங்களூர் மேச்சஸ்,  கோவா ஸ்னீப்பர்ஸ்,  கொச்சி நைட்ஸ், ஐதராபாத் பல்லேர்ஸ் என 12 அணிகள் பங்கேற்கின்றன. 10 நிமிட போட்டியில் ஒவ்வொரு அணியிலும் தலா 3 வீரர்கள் களமிறங்குகின்றனர். பெங்களூரு, டெல்லி, கொல்கத்தாவை தொடர்ந்து சென்னையில் 4வது சுற்றுக்கான தகுதி போட்டிகள் நேற்று தொடங்கின. முதல் 8  இடங்களைப் பிடித்த அணிகள் இன்று கால் இறுதியில் களமிறங்குகின்றன. இதுவரை நடந்துள்ள 3 சுற்றுகளில் டெல்லி ஹூப்பர்ஸ் 302 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது.

மூலக்கதை