Seine-et-Marne - நீரில் மூழ்கி இருவர் பலி!!

PARIS TAMIL  PARIS TAMIL
SeineetMarne  நீரில் மூழ்கி இருவர் பலி!!

வியாழக்கிழமை 9 வயதுடைய சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி, மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அன்றைய நாளில் 16 வயதுடைய சிறுவன் ஒருவனின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.  
 
இத்தகவல் நேற்று சனிக்கிழமை வெளியாகியுள்ளது. Seine-et-Marne இல் உள்ள leisure பூங்காவின் நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த 9 வயது சிறுமி நீரில் மூழ்கி மயக்கடைந்த நிலையில், உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட சிலமணி நேரங்களிலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி பெரியவர்களுடன் சேர்த்து தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்ததாகவும், நீரில் மூழ்கியதுக்குரிய காரணம் குறித்து அறியமுடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதே நாளில், அதே பூங்காவில் உள்ள நீச்சல் தடாகத்தில் 16 வயதுடைய சிறுவன் ஒருவனின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவன் உடல்சோர்வினால் நீரில் மூழ்கியுள்ளதாக அறியமுடிகிறது. கடந்த ஜூன் 1 ஆம் திகதியில் இருந்து ஜூலை 5 ஆம் திகதி வரை 121 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. பிரதமர் Édouard Philippe தெரிவிக்கும்போது, 'சிறுவர்களுக்கான நீச்சல் பயிற்சியில், நீரில் மூழ்கிடாமல் இருக்கவும் பழக்கவேண்டும்!' என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 

மூலக்கதை