தொடர் பணி பகிஷ்கரிப்பு! - 790 மில்லியன் யூரோக்கள் நஷ்டம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
தொடர் பணி பகிஷ்கரிப்பு!  790 மில்லியன் யூரோக்கள் நஷ்டம்!!

தொடரூந்து தொழிலாளர்களின் தொடர் பணி பகிஷ்கரிப்பினால் SNCF க்கு 790 மில்லியன் யூரோக்கள் எனும் மிகப்பெரும் தொகை நஷ்ட்டமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 
 
இந்த மிகப்பெரும் இழப்பு, கடந்த மூன்று மாதங்களில் ஏற்பட்டதாகும். மார்ச் 22 ஆம் திகதியில் இருந்து ஜூன் 28 ஆம் திகதி வரையான மூன்றுமாத காலப்பகுதியில் 790 மில்லியன்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு €21 மில்லியன்கள் படி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. CGT உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் கடந்த மூன்று மாதங்களாக தொடர் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்திருந்தமை வாசகர்கள் அறிந்ததே. அரசு தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, ஓகஸ்ட் மாதத்திலும் பணி பகிஷ்கரிப்பு தொடரும் என அறிவித்துள்ளது. 
 
இந்நிலையில், 790 மில்லியன் யூரோக்களில், 600 மில்லியன் வரை போக்குவரத்து தடையினாலும், மீதமான பணம் நஷ்ட ஈடு உள்ளிட்ட சில பகுதிகளினாலும் இந்த இழப்பு SNCFக்கு ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

மூலக்கதை