துல்கர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி..?

தினமலர்  தினமலர்
துல்கர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி..?

சமீபகாலமாக வெளிவரும் சில படங்களில் திடீரென ஒரு முன்னணி ஹீரோவை கெஸ்ட் ரோலில் நடிக்கவைத்து ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைப்பது, அதன்மூலம் படத்தின் பிசினஸ் வேல்யூவை கூட்டுவது என்கிற ஒரு பார்முலாவை ஒருசில இயக்குனர்கள் பின்பற்றி வருகிறார்கள்.. முன்பெல்லாம் ஆர்யா, ஜீவா ஆகிய இருவரும் தான் அடிக்கடி இப்படி கெஸ்ட் ரோலில் நடித்து வந்தனர்..

ஆனால் இப்போதைய இயக்குனர்கள் ரசிகர்களின் பல்ஸ் அறிந்து, அவர்களுக்கு பிடித்த நடிகரான விஜய் சேதுபதியை தங்களது படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்து வருகின்றனர். விஜய் சேதுபதியும் நட்புக்காக அவர்களின் அழைப்பை ஏற்று நடித்து வருகிறார்..

அந்தவகையில் தற்போது தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்து வரும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் விஜய்சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி அதை உறுதிப்படுத்துவது போல இருக்கிறது.

மூலக்கதை