ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் டிப்ஸ்

தினமலர்  தினமலர்
ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் டிப்ஸ்

கிரீஸ் : போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ, உலக கோப்பையில் நாக் அவுட் சுற்றுடன் வெளியேறிய பின் தனது காதலி மற்றும் குடும்பத்தினருடன் கிரீஸூக்கு சுற்றுலா சென்றார். அங்கு கோஸ்டா நவரினோ என்ற ஆடம்பர நட்சத்திர ஓட்டலில் தங்கிய அவர், ஓட்டல் ஊழியர்களின் கவனிப்பில் மகிழ்ந்து, செக் அவுட் செய்யும் போது டிப்ஸாக மட்டும் 17 ஆயிரத்து 850 யூரோவை கொடுத்து சென்றார்.

அவர் தவறுதலாக தந்ததாக நினைத்த ஓட்டல் நிர்வாகம், இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, சந்தேகமே வேண்டாம் தெரிந்து தான் கொடுத்துள்ளேன் என்று புன்னகையுடன் தெரிவித்தார். அவர் கொடுத்த யூரோவின் இந்திய மதிப்பு 16 லட்சம் ரூபாய்!

மூலக்கதை