தேங்காய் விலை சரிவு : தென்னை ஈர்க்கு விலை உயர்வு

தினகரன்  தினகரன்
தேங்காய் விலை சரிவு : தென்னை ஈர்க்கு விலை உயர்வு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தேங்காய் விலை சரிந்தபோதிலும், தென்னை ஈர்க்கு விலை அதிகரித்துள்ளது.குமரி மாவட்டத்தில் சுமார் 24 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை மரங்கள் உள்ளன.  தற்போது இவற்றில் தேங்காய் உற்பத்தி தொடங்கியுள்ளது. முன்பு ஒரு கிலோ தேங்காய் ரூ.44க்கு விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஆனால், பின்னர் படிப்படியாக குறைந்து தற்போது ஒரு கிலோ தேங்காய் ரூ.28க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தேங்காய்க்கு உரிய விலை இல்லாத காரணத்தாலும், தொழிலாளர்களுக்கு வேலை கூலி அதிகமாக இருப்பதாலும் பல தென்னந்தோப்புகளை விவசாயிகள் பராமரிக்காமல் உள்ளனர். இதனால் பெரும்பாலான தென்னந்தோப்பு  புதர் மண்டி கிடக்கிறது.தேங்காய் விலை குறைந்து வந்தாலும், தென்னை ஓலையில் இருந்து கிடைக்கும் ஈர்க்கு விலை உயர்ந்து வருகிறது. தன்னை ஈர்க்கு பல மாவட்டங்களுக்கு துடைப்பத்துக்காக அனுப்பட்டு வருகிறது. ஓலையில் இருந்து ஈர்க்கு எடுக்கும் வேலையை குமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பெண்கள் செய்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ஈக்கு ரூ.11க்கு கொள்முதல் செய்யப்பட்டது. பின்னர் ரூ.16க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது ₹20க்கு ஈர்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தேங்காய் விலை குறைந்து வரும் நிலையில் ஈர்க்கு விலை உயர்ந்து வருவது சற்று ஆறுதலாக உள்ளது என விவசாயிகள் கூறுகின்றனர்.

மூலக்கதை