இறந்த தந்தையின் உடல் முன் செல்பி

தினமலர்  தினமலர்
இறந்த தந்தையின் உடல் முன் செல்பி

பெல்கிரேட் : செர்பியா நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி ஜெலிகா லுாபியிக், லைக்குகளுக்கு ஆசைப்பட்டு, மருத்துவமனையில் இறந்து கிடந்த தனது தந்தையின் உடல் முன்பு செல்பி எடுத்து, அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர் ஒருவர், ''மனநோயாளிகள் மட்டுமே இதுபோன்ற பதிவுகளை வெளியிடுவர்'' என பதிவிட்டிருந்தார். அதேபோன்று மற்றும் ஒரு நபர், "அவர் புகைப்படம் எடுப்பதில் இருந்தே தெரிகிறது. எந்த அளவிற்கு அவரது தந்தையை பாதுகாத்திருப்பார் என்பது" என பதிவிருந்தார். இதையடுத்து அவர் அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார்.

மூலக்கதை