நேரம் ஒதுக்குவதில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பாரபட்சம் : கார்கே குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
நேரம் ஒதுக்குவதில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பாரபட்சம் : கார்கே குற்றச்சாட்டு

நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் கலந்து கொள்வதற்காக பாஜ தலைவர் அமித் ஷாவுடன் மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்தகுமார் வந்தார். இருவரும் வெற்றிச்சின்னத்தை காட்டிக்கொண்டு அவையின் உள்ளே சென்றார்கள். முன்னதாக அனந்த குமார் அளித்த பேட்டியில், ‘‘நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, தேவையான, போதுமான பலம் இருக்கிறது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியின் கூடுதல் பலத்தை எதிர்க்கட்சிகள் பார்க்கும். எங்கள் கூட்டணி எண்ணிக்கையின் பலம் தற்போது அதிகரித்து இருப்பதை அவர்கள் இந்த நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு பிறகு அறிந்து இருப்பார்கள்’’ என்றார்.இது நியாயமல்ல: கார்கே குற்றச்சாட்டுநம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு முன்பாக நாடாளுமன்றம் வெளியே, மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான  மல்லிகார்ஜுன கார்கே அளித்த பேட்டி: இந்த விவாதம், நாடு முழுவதும் கவனிக்கும் விஷயமாகும். இந்த விவாதத்தில் ஆளும் கட்சியினருக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள எதிர்க்கட்சியினருக்கு அவையில் பேச மிகவும் குறைந்த நேரம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. நேரம் ஒதுக்குவதில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பாரபட்சம் காட்டியுள்ளார். அவரது முடிவு நியாயமற்றது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை கேள்வி நேரத்தை போல் எடுத்துக்கொள்ளக் கூடாது. எங்கள் கட்சிக்கு 32 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.மாற்றாந்தாய் மனப்பான்மை ...அதிமுக எம்பி குற்றச்சாட்டு;நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக மக்களவை கட்சித் தலைவர் பி.வேணுகோபால், “மத்திய அரசுக்கு தமிழ்நாடு அதிக வருவாய் ஈட்டி வருகிறது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து தமிழகம் பெறுவது மிகவும் குறைவு. பொருளாதார வளர்ச்சி, மக்கள் தொகையை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் சாதனை செய்துவரும் தமிழ்நாடு, மத்திய அரசால் தண்டிக்கப்படுகிறது. நாட்டில் உள்ள நதிநீர் பிரச்னைகளை தீர்க்காமல், அணை பாதுகாப்பு மசோதா கொண்டுவரக் கூடாது” என்றார்.சிவசேனா, பிஜு ஜனதா தளம் வெளிநடப்புமோடி அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயிடம் பாஜ தலைவர் அமித்ஷா கேட்டுக்கொண்டார். இதை ஏற்ற உத்தவ், தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்கும்படி தனது கட்சி எம்பிக்களுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரத்தில் உத்தவ் தாக்கரே நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. அதன்படி, இக்கட்சி எம்பி.க்கள் நேற்று வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் அவையை புறக்கணித்தனர். ஒரு பயனும் இல்லை: விவாதம் தொடங்கும் முன்பாக எழுந்த பிஜு ஜனதா தள எம்பி பரத்ருஹரி மதாப், ‘‘இந்த விவாதத்தால் ஒடிசாவுக்கு ஒரு நன்மையும் கிடைக்கப் போவதில்லை. எனவே, விவாதத்தில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்கிறோம்’’ என்றார். இதைத் தொடர்ந்து, இக்கட்சியின் 19 எம்பிக்களும் வெளிநடப்பு செய்தனர்.

மூலக்கதை