கட்டிபிடித்து, கண்ணடித்தது சரியான நடவடிக்கை அல்ல : சபாநாயகர் அதிருப்தி

தினகரன்  தினகரன்
கட்டிபிடித்து, கண்ணடித்தது சரியான நடவடிக்கை அல்ல : சபாநாயகர் அதிருப்தி

மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி அமர்ந்திருந்த இருக்கை அருகே சென்று அவரை கட்டிப்பிடித்தார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். பின் இருக்கைக்கு வந்ததும், காங்கிரஸ் எம்.பியை பார்த்து கண்ணடித்தார். இதற்கு பாஜ உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், “ ராகுல் ஜி எனது மகன் போன்றவர். பிள்ளையை சரிசெய்வது தாயின் பணியாகும். ராகுலின் செயல் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு  பிடித்திருக்கலாம். ஆனால் நாடாளுமன்றத்தில் சில நடத்தைகள் கடைப்பிடிக்கப்படவேண்டியது அவசியம்.  பிரதமர் மோடி அவையில் பிரதமர் இருக்கையில் அமர்ந்திருக்கிறார். யாரையும் கட்டி அணைப்பதற்கு நான் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. நானும் ஒரு தாய் தான். ஆனார் அவர் நாட்டின் பிரதமர். அவரை கட்டி தழுவி, இருக்கைக்கு வந்து கண்ணடித்து விட்டு மீண்டும் பேச்சை தொடர்வது சரியான நடவடிக்கை அல்ல’’ என்றார். ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்:நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த் குமார் அளித்த பேட்டியில், ‘‘ராகுலின் நடத்தை சிறுபிள்ளைத்தனமாக இருந்தது. காங்கிரஸ் தலைவரான பிறகும் கூட அவர் இன்னும் முதிர்ச்சி அடையாதது துரதிஷ்டவசமானது. நாடாளுமன்ற விதிகளின் படி, உறுப்பினர் மீது எந்த குற்றச்சாட்டு சுமத்துவதாக இருந்தாலும் அதற்கு முன்பாகவே முறைப்படி நோட்டீஸ் தர வேண்டும். குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை சபாநாயகரிடம் தர வேண்டும். ஆனால், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது ராகுல் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி அவையை தவறாக வழிநடத்தி உள்ளார். இதற்காக அவர் மீது உரிமை மீறல் நோட்டீஸ் கொடுக்கப்படும்’’ என்றார்.

மூலக்கதை