ரபேல் ஒப்பந்தம் ரகசியமானதுதான் : பிரான்ஸ் திடீர் விளக்கம்

தினகரன்  தினகரன்
ரபேல் ஒப்பந்தம் ரகசியமானதுதான் : பிரான்ஸ் திடீர் விளக்கம்

ராகுல் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து பிரான்ஸ் அரசின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரபேல் போர் விமானம் தொடர்பாக இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே 2008ல்ஒப்பந்தம் போடப்பட்டாலும், 2016 செப்டம்பர் 23ல் தான் 36 போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்திய நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பேசியது எங்கள் கவனத்திற்கு வந்தது. இதுதொடர்பாக 2018 மார்ச் 9ல் இந்தியா டுடே நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பிரான்ஸ் அதிபர் மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இருநாடுகள் இடையே மேற்கொள்ளப்பட்ட ரபேல் ஒப்பந்தம் மிகவும் பாதுகாப்பானது. இதுதொடர்பான ரகசியங்களை வெளியே கூற முடியாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. பிரான்ஸ் அறிக்கை குறித்து ராகுல் காந்தி கூறும்போது,’ அவர்கள்(பிரான்ஸ்) வேண்டுமானால் இப்போது மறுக்கலாம். ஆனால் பிரான்ஸ் அதிபர் என்னிடம் தான் இந்த தகவலை சொன்னார். அப்போது எங்களுடன் மன்மோகன்சிங், ஆனந்த் சர்மா ஆகியோர் இருந்தனர்’ என்று குறிப்பிட்டார்.ரபேல் ஒப்பந்தத்தில் என்ன பிரச்னை?பிரான்ஸிடம் இருந்து ரபேல் போர் விமானம் வாங்க 2008 ஜனவரி 25ல் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி கையெழுத்திட்டார்.அதை தொடர்ந்து 2016 செப்டம்பரில் இருநாடுகள் இடையே தனிப்பட்ட முறையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.₹ 58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க முடிவு எடுக்கப்பட்டது. 2019 செப்டம்பர் முதல் விமானம் சப்ளை செய்யப்பட உள்ளது.இதில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.    2017 நவம்பரில் கத்தார் நாடு 12 ரபேல் போர் விமானங்களை வாங்கியது. ஒவ்வொரு விமானத்திற்கும் ரூ.694.80 கோடிதான் கொடுத்தது என்று குறிப்பிட்டது.இந்தியா அதிக தொகை கொடுத்து ரபேல் போர் விமானங்களை வாங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பியது.

மூலக்கதை