15 ஆண்டுக்கு பின் நம்பிக்கையில்லா தீர்மானம்

தினகரன்  தினகரன்
15 ஆண்டுக்கு பின் நம்பிக்கையில்லா தீர்மானம்

கடந்த 1963ம் ஆண்டு முதல் முறையாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இன்று 27வது முறையாக கொண்டு வரப்படுகிறது. பிரதமராக இருந்தபோது இந்திரா காந்தி மட்டும், 15 முறை நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொண்டார்.  கடந்த 25 ஆண்டுகளில், 1993ம் ஆண்டு நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது, பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதில், அரசு வெற்றி பெற்றது. கடந்த 1999ம் ஆண்டு வாஜ்பாய் அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் அரசு தோல்வி அடைந்தது. கடந்த 2003ம் ஆண்டு வாஜ்பாய் அரசு, 2008ம் ஆண்டு மன்ேமாகன் சிங் அரசுகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் அரசு வெற்றி பெற்றது. கடந்த 15 ஆண்டுக்கு பின் மத்திய பாஜ அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நேற்று கொண்டு வரப்பட்டது. தெலுங்குதேசம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பசு பாதுகாவலர்களின் வன்முறை, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை, எஸ்.சி/எஸ்.டி சட்டத்தை நீர்த்துபோகச் செய்தது உட்பட பல்வேறு காரணங்களுக்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜ அரசுக்கு  எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது.

மூலக்கதை