பிரதமர் மோடி 23ம் தேதி வெளிநாடு பயணம்

தினகரன்  தினகரன்
பிரதமர் மோடி 23ம் தேதி வெளிநாடு பயணம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் அரசு முறை பயணமாக அடுத்த வாரம் 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பர்க்கில் வருகிற 25ம் தேதி முதல் 27 ம் தேதி வரை பிரிக்ஸ் மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி 5 நாள் அரசு முறை பயணமாக  வெளிநாடு செல்கிறார். இது தொடர்பாக வெளியுறவு துறை அமைச்சக செயலாளர்( பொருளாதார உறவுகள்) திருமூர்த்தி கூறியதாவது:  ருவாண்டா, உகண்டா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 3 நாடுகளுக்கும் வருகிற 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். முதலில் மோடி ருவாண்டா செல்கிறார். 2 நாட்கள் அங்கிருக்கும் அவர். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர் 24ம் தேதி பிரதமர் உகாண்டா செல்கிறார். 1997ம் ஆண்டுக்கு பின்னர் உகாண்டா செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசும் பிரதமர், அங்குள்ள இந்திய மக்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். உகாண்டாவில் இருந்து 25ம் தேதி பிரதமர் தென்னாப்பிரிக்கா புறப்பட்டு செல்கிறார். 10வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார். இதில் உலகளாவிய பிரச்னைகள், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு, உலக அளவிலான ஆளுகை மற்றும் வர்த்தக பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும். மாநாட்டின்போது சில நாட்டு தலைவர்களளை பிரதமர் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. எந்த நாட்டுடன் இருதரப்பு உறவு குறித்து பேசுவது என்பது குறித்தெல்லாம் முடிவு செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.200 பசுக்கள் பரிசுருவாண்டாவின் ரிவிரு கிராமத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, கிரின்கா திட்டத்தின் கீழ் 200 பசுக்களை பரிசாக வழங்குகிறார். அந்நாட்டில் ஏழை குடும்பங்களுக்கு அரசு சார்பில் கறவை பசுக்கள் வழங்கப்படும். இந்த பசு ஈன்றெடுக்கும் முதல் கன்றுகுட்டியானது (பெண்) அண்டை வீட்டாருக்கு வழங்கப்படும்.

மூலக்கதை