பார்லி.,ல் ராகுல் பேச்சு : பிரான்ஸ் அரசு மறுப்பு

தினமலர்  தினமலர்
பார்லி.,ல் ராகுல் பேச்சு : பிரான்ஸ் அரசு மறுப்பு

பாரீஸ் : லோக்சபாவில் ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்., தலைவர் ராகுல் பேசியதற்கு பிரான்ஸ் அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது.

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, ரபேல் ஒப்பந்தத்தில் எந்த ரகசிய உடன்படிக்கையும் இல்லை என்று பிரான்ஸ் அதிபர் தம்மிடம் கூறியதாக ராகுல் தெரிவித்தார். இந்நிலையில், பிரான்ஸ் அரசின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ராகுலின் பேச்சு இருநாடுகளின் ரகசிய உடன்படிக்கையை மீறி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மிகவும் ரகசியமானது என்பதால், விமானங்களின் விலை, செயல்பாடு உள்ளிட்ட முழு விவரங்களையும் வெளியிட இயலாது என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் அரசின் விளக்கம் குறித்து பதிலளித்துள்ள ராகுல் , முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் முன்னிலையில், ரஃபேல் ஒப்பந்தம் பற்றி பிரான்ஸ் அதிபர் தன்னிடம் கூறியதையே தாம் தெரிவித்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.

மூலக்கதை