ஜுங்கா - விஜய்சேதுபதி, கோகுல் கூட்டணி மீண்டும் சாதிக்குமா ?

தினமலர்  தினமலர்
ஜுங்கா  விஜய்சேதுபதி, கோகுல் கூட்டணி மீண்டும் சாதிக்குமா ?

தமிழ்த் திரையுலகத்தில் கடந்த சில வருடங்களில் வித்தியாசமான நடிகர் என்ற பெயரை வாங்கியுள்ளவர் விஜய் சேதுபதி. அவருடைய படங்கள் வெற்றி பெற்று வசூலைக் குவித்தாலும், வெற்றி பெறாமல் தோல்வியடைந்தாலும் கூட அவருடைய கதாபாத்திரங்களும், அதில் அவருடைய நடிப்பும் பேசப்படும் விதமாக அமைந்து வருகின்றன.

விஜய் சேதுபதி நடிக்க கோகுல் இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளிவந்த 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படம் வித்தியாசமான படமாக அமைந்தது. கலகலப்பாகவும், அதே சமயம் ரத்த தானத்தை வலியுறுத்தியும் அந்தப் படம் மாறுபட்ட படமாக அமைந்து ரசிக்க வைத்தது. விஜய் சேதுபதியின் கதாபாத்திரமான 'சுமார் மூஞ்சி குமார்' ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இயக்குனர் கோகுல், விஜய் சேதுபதி கூட்டணி 5 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஜுங்கா' படம் மூலம் இணைந்துள்ளது. ஒரு 'கஞ்சத்தனமான டான்' பற்றிய கதையைக் கொண்ட இந்தப் படம் அடுத்த வாரம் ஜுலை 27ம் தேதி வெளியாகிறது. நகைச்சுவை கலந்த படம் என்பதால் 'ஜுங்கா' படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கோகுல், விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் பேசப்படுமா என்பது ஒரு வாரத்திற்குள் தெரிந்துவிடும்.

மூலக்கதை