ரஜினி படம் - நழுவும் விஜய்சேதுபதி

தினமலர்  தினமலர்
ரஜினி படம்  நழுவும் விஜய்சேதுபதி

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதியும் நடிப்பது பழைய தகவல். டார்ஜிலிங்கில் துவங்கிய இந்தப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

ரஜினி படத்தில் நடிப்பது குறித்து விஜய்சேதுபதியிடம் கேட்டால், 'அந்தப்படத்தின் கதை என்ன, அதில் என்னுடையை கேரக்டர் என்ன என்று சத்தியமாக எனக்கு தெரியாது.” என்கிறார்.

“கார்த்திக் சுப்பராஜிடம் நான் கேட்டதும் கிடையாது, அவர் சொன்னதும் கிடையாது.” என்று காமெடி பண்ணும் அவரிடம், ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார் என்று வெளியாகும் செய்திகளைப் பற்றி கேட்டால், 'அதெல்லாம் ஷூட்டிங்குக்கு போகும்போதுதான் தெரியும்'' என்று நழுவுகிறார் விஜய்சேதுபதி!

மூலக்கதை