'கடைக்குட்டி சிங்கம்' - ஆல் ஏரியா ஹேப்பி...!

தினமலர்  தினமலர்
கடைக்குட்டி சிங்கம்  ஆல் ஏரியா ஹேப்பி...!

'தமிழ்ப்படம் 2' படத்துடன் 'கடைக்குட்டி சிங்கம்' போட்டி போட வேண்டும் என்று திரையுலகத்தில் சிலர் சொன்னார்கள். இன்னும் சிலரோ டிவி சீரியல் என 'கடைக்குட்டி சிங்கம்' படத்தைக் கிண்டல் செய்தார்கள்.

ஆனால், வீடுகளில் டிவி சீரியல்களைப் பார்த்துக் கொண்டு, சினிமா தியேட்டர் பக்கம் அதிகம் வராத பெண்களையும், குடும்பத்தினரையும் தியேட்டர்கள் பக்கம் வரவழைத்திருக்கிறது 'கடைக்குட்டி சிங்கம்' என அப்போது கிண்டலடித்தவர்கள் இப்போது பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

'தமிழ்ப்படம் 2' படத்திற்கு சிட்டி ஏரியாக்களில் மட்டும் தான் வரவேற்பு என்று இருந்தது. ஆனால், 'கடைக்குட்டி சிங்கம்' படத்திற்கு சிட்டி தவிர பி அன்ட் சி சென்டர்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது என்பதுதான் கோலிவுட் வட்டாரத் தகவல். ஒரு வாரம் கடந்த நிலையிலும் தியேட்டர்களுக்கு மக்கள் குடும்பம் குடும்பமாக வருகிறார்கள் என தியேட்டர்காரர்களே பாராட்டி வருகிறார்கள்.

இளைஞர்கள் மட்டும் தான் படம் பார்க்க அதிகம் வருகிறார்கள் என்ற கூற்றையும் 'கடைக்குட்டி சிங்கம்' உடைத்ததில் மற்ற தயாரிப்பாளர்களுக்கும் மகிழ்ச்சி. தரமான குடும்பப் படத்தை எடுத்தால் மக்கள் டிவியை மறந்து தியேட்டர் பக்கமும் வருவார்கள் என்பதை இந்தப்படம் புரிய வைத்திருக்கிறது.

படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, நாயகன் கார்த்தி, இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர் 'கடைக்குட்டி சிங்கம்' பெரிய வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம். அனைத்து ஏரியாக்களிலும் வசூல் நன்றாக இருப்பதால் எப்படியும் 18 கோடி ரூபாய்க்கு மேல் 'ஷேர்' வரும் என்ற ஒரு பேச்சு திரையுலகிலும் மகிழ்வைத் தந்துள்ளது.

மூலக்கதை