ஜூலை 23ல் சமந்தா - நாகசைதன்யா படம் ஆரம்பம்

தினமலர்  தினமலர்
ஜூலை 23ல் சமந்தா  நாகசைதன்யா படம் ஆரம்பம்

சினிமாவில் ஜோடியாக வலம் வந்த சமந்தா - நாகசைதன்யா நிஜத்திலும் ஜோடியானார்கள். திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். சிவா நிர்வணா இயக்கும் பெயரிடப்படாத படத்தில் மீண்டும் காதல் ஜோடிகளாகவே சமந்தாவும், நாக சைதன்யாவும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை 23-ந்தேதி முதல் ஐதராபாத்தில் தொடங்குகிறது. இப்படம் கல்லூரியில் நடக்கும் காதல் கதையில் உருவாகிறது.

மூலக்கதை