அமெரிக்காவில் சுற்றுலா படகு கவிழ்ந்து 17 பேர் பலி

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் சுற்றுலா படகு கவிழ்ந்து 17 பேர் பலி

பிரான்சன்: அமெரிக்காவின் மிசௌரி மாகாண ஏரியில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 17 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள். அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் உள்ள பிரான்சனில் டேபிள் ராக் ஏரி உள்ளது. இந்த ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினமும் படகு ஓன்றில் சுற்றுலா பயணிகள் ஏரியில் பயணம் செய்தனர். ஏரியின் மையப்பகுதிக்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக படகு மூழ்கியது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். இதனைப்பார்த்த மற்ற படகுகளில் இருந்த சுற்றுலா பயணிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து உடனடியாக அங்கு விரைந்த மீட்பு குழுவினர் நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 4 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் ஒரு குழந்தை உட்பட 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 5 பேரின் நிலை என்ன என தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நடக்கிறது.

மூலக்கதை