இந்தியாவில் எச்ஐவி தொற்று குறைந்துள்ளது : ஐநா அறிக்கை

தினகரன்  தினகரன்
இந்தியாவில் எச்ஐவி தொற்று குறைந்துள்ளது : ஐநா அறிக்கை

வாஷிங்டன்: இந்தியாவில் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்படுவது, இறப்பது வெகுவாக குறைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையோடு இணைந்த எய்ட்ஸ் தடுப்பு துறை ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2010ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை கம்போடியா, இந்தியா, மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாமில் எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்படுவது குறைந்துள்ளது. அதே நேரத்தில் உலகளவில் புதிய எச்ஐவி நோய்தொற்றுக்கள் போதுமான அளவு குறையவில்லை. பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்சில் எச்ஐவி தொற்று பரவுதல் அதிகரித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை புதிய எச்ஐவி தொற்றால் பாதிக்கப்படுவது குறைந்துள்ளது. 2010ம் ஆண்டு எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,20,000 இருந்தது. இது 2017ம் ஆண்டு 88ஆயிரமாக குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் எய்ட்ஸ் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 60ஆயிரத்தில் இருந்து 69ஆயிரமாக குறைந்துள்ளது. எச்ஐவியோடு இருப்பவர்களின் எண்ணிக்கையானது 23,00,000 இருந்து 21,00,000 ஆக குறைந்துள்ளது. உலக அளவில் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்படுவது கடந்த 7 ஆண்டுகளில் 18 சதவீதமாக குறைந்துள்ளது. 2010ம் ஆண்டு 2.2 மில்லியனாக இருந்த எண்ணிக்கை 2017ம் ஆண்டில் 1.8மில்லியனாக குறைந்துள்ளது. உலகம் முழுவதும் 3 கோடியே 69 லட்சம் பேர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். 2 கோடியே 17 லட்சம் பேர்21.7 மில்லியன் பேர் சிகிச்ைச பெற்று வருகின்றனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை