பாகிஸ்தானை சேர்ந்த தந்தை, மகனுக்கு 18 மாதம் சிறை : அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

தினகரன்  தினகரன்
பாகிஸ்தானை சேர்ந்த தந்தை, மகனுக்கு 18 மாதம் சிறை : அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

வாஷிங்டன்: தடை செய்யப்பட்ட பொருட்களை பாகிஸ்தான் ராணுவத்துக்கு சட்ட விரோதமாக அனுப்பிய அமெரிக்காவை சேர்ந்த பாகிஸ்தானிய தந்தை, மகனுக்கு 18 மாதம் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானியர் முகமது இஸ்மாயில்(67). இவரது மகன்கள் கம்ரான்கான் (38) மற்றும் இம்ரான். இவர்கள் 3 பேரும் கடந்த 2012ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில அமெரிக்க ஏற்றுமதி நிர்வாக ஒழுங்கமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பொருட்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அவர்கள் ஏற்றுமதிக்கான அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக, பல பொருட்களை பாகிஸ்தான் ராணுவத்திற்கு அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், `முகமது இஸ்மாயிலும், கம்ரான்கானும் தொடர்புடைய பிரஸ் லாக்கர் டூல்ஸ் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள கவுசர் என்டர்பிரைசஸ் நிறுவனம் மற்றும் பாகிஸ்தானில் உள்ள கவுசர் என்டர்பிரைசஸ் நிறுவனம் ஆகியவை பாகிஸ்தான் ராணுவத்திற்கு தேவையான பல பொருட்களை கப்பல் மூலமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது’ என குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதற்கான பணத்தை இன்டர்நெட் பரிமாற்றம் மூலம் அவர்கள் பெற்றதும் வழக்கு விசாரணையில் உறுதியானது. இதையடுத்து, முகமது இஸ்மாயில், கம்ரான் கானுக்கு 18 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மற்றொரு மகன் இம்ரான் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

மூலக்கதை