இந்தியா யு-19 இன்னிங்ஸ் வெற்றி

தினகரன்  தினகரன்
இந்தியா யு19 இன்னிங்ஸ் வெற்றி

கொழும்பு: இலங்கை யு-19 அணியுடன் நடந்த இளைஞர் டெஸ்டில், இந்தியா யு1-9 அணி இன்னிங்ஸ் மற்றும் 21 ரன் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்று பேட் செய்த இலங்கை யு-19 முதல் இன்னிங்சில் 244 ரன்னுக்கு ஆல் அவுட்டான நிலையில், இந்தியா யு-19 அணி 589 ரன் குவித்தது. டெய்டே 113, படோனி 185*, வதேரா 82 ரன் விளாசினர். இலங்கை யு-19 2வது இன்னிங்சில் 324 ரன்னுக்கு சுருண்டதை அடுத்து, இந்தியா யு-19 இன்னிங்ஸ் மற்றும் 21 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. ஜங்ரா 5 விக்கெட் கைப்பற்றினார்.

மூலக்கதை