புடினை மீண்டும் பேச அழைக்கும் டிரம்ப்

தினமலர்  தினமலர்
புடினை மீண்டும் பேச அழைக்கும் டிரம்ப்

வாஷிங்டன், பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் நடந்த டிரம்ப், -புடின் உச்சி மாநாட்டின் நிறைவில் இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தபோது, அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு இருந்ததா என்ற கேள்விக்கு இல்லை என்று டிரம்ப் பதிலளித்தது, அமெரிக்காவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.மறுநாள் அவர் தமது கருத்தை மாற்றிக்கொண்டு, அமெரிக்கத் தேர்தலில் தலையிட்டது வேறு யாராவது கூட இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார். இது மீண்டும் குழப்பத்தை உண்டாக்கியது. பயங்கரவாதத்தை நிறுத்துவது, இஸ்ரேலுக்குப் பாதுகாப்பு, அணுஆயுதம் உள்ளிட்ட அந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை செயல்படுத்துவதற்கு இரண்டாவது சந்திப்பை தாம் எதிர்நோக்கியிருப்பதாகவும் டிரம்ப் பதிவில் தெரிவித்துள்ளார்.அமெரிக்க செனட் அவையின் ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ஷும்மர், புடினுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்திருப்பது குறித்து , "ஹெல்சின்கியில் நடந்த அந்த இரண்டு மணி நேர சந்திப்பில் என்ன நடந்தது என்பதைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளும் முன்பாக டிரம்பும் புடினும், அமெரிக்காவிலோ, ரஷ்யாவிலோ, வேறெங்குமோ தனியாக சந்தித்துப் பேசக்கூடாது," என்றார்.அமெரிக்காவின் தேசிய உளவுப் பிரிவு இயக்குநர் டான் கோட்ஸ் "டிரம்பும் புடினும் ஹெல்சின்கியில் தனியறையில் பேசிய போது அவர்களது மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே இருந்தனர். அங்கே என்ன பேசப்பட்டது என்று தமக்குத் தெரியாது" என்றார்.

மூலக்கதை