5 லட்சம் கிலோ தேயிலை தேக்கம்

தினமலர்  தினமலர்
5 லட்சம் கிலோ தேயிலை தேக்கம்

குன்னுார் : லாரி, ‘ஸ்டி­ரைக்’ கார­ண­மாக, குன்­னுா­ரில் உள்ள குடோன்­களில், 5 லட்­சம் கிலோ தேயி­லைத் துாள் தேக்­க­ம­டைந்து உள்­ளது.

நீல­கிரி மாவட்ட பொரு­ளா­தா­ரத்­தில் முக்­கிய பங்கு வகிக்­கும் தேயிலை தொழிலை நம்பி, 65 ஆயி­ரம் விவ­சா­யி­கள், பல்­லா­யி­ரம் தொழி­லா­ளர்­கள் உள்­ள­னர். இங்கு உற்­பத்தி செய்­யப்­படும் தேயி­லைத் துாள், குன்­னுார் ஏல மையங்­களில், வாரந்­தோ­றும் ஏலம் விடப்­ப­டு­கிறது.

வாரத்­தில் புதன் முதல் வெள்ளி வரை, மூன்று நாட்­கள் நடக்­கும் ஏலத்­தில் விடப்­படும் தேயி­லைத் துாள், குன்­னுார் மட்­டு­மின்றி, மேட்­டுப்­பா­ளை­யத்­தில் உள்ள குடோன்­களில் வைக்­கப்­பட்டு, நாட்­டின் பல்­வேறு பகு­தி­க­ளுக்­கும் அனுப்­பப்­ப­டு­கிறது. இந்­நி­லை­யில், தற்போது நாடு முழு­வ­தும் லாரி ஸ்டி­ரைக் நடந்து வரு­வ­தால், குன்­னுா­ரில் இருந்து தேயி­லைத் துாள், சரக்கு லாரி­களில் கொண்டு செல்ல முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

குன்­னுார் பெல்­ம­வுன்ட் பகு­தி­யில் உள்ள குடோன் மேற்­பார்­வை­யா­ளர், சிவா­நந்­தன் கூறு­கை­யில், ‘‘குன்­னுா­ரில் உள்ள குடோன்­களில் வைக்­கப்­பட்­டுள்ள தேயி­லைத் துாள், நாள்­தோ­றும், 40 லாரி­களில் தமி­ழ­கம், கேரளா, கர்­நா­டகா, ஆந்­திரா, குஜ­ராத் மாநி­லங்­க­ளுக்கு அனுப்­பப்­பட்டு வரு­கிறது. ‘‘சரா­ச­ரி­யாக, நாள்­தோ­றும், 4 லட்­சம் முதல், 5 லட்­சம் கிலோ தேயி­லைத் துாள் அனுப்­பப்­ப­டு­கிறது. லாரி ஸ்டி­ரைக்­கால், இன்று (நேற்று) ஒரு நாள் மட்­டும், 5 லட்­சம் கிலோ தேக்­க­ம­டைந்­து உள்­ளது. ‘‘இந்த ஸ்டி­ரைக் நீடிக்­கும் பட்­சத்­தில், பசுந்­தே­யிலை விவ­சா­யி­கள் பாதிப்­ப­டை­வர்,’’ என்­றார்.

மூலக்கதை