பஞ்சின் தரத்தை மேம்படுத்த மில் உரிமையாளர்கள் ஆலோசனை

தினமலர்  தினமலர்
பஞ்சின் தரத்தை மேம்படுத்த மில் உரிமையாளர்கள் ஆலோசனை

கோவை : பிற மாநி­லங்­களில் இருந்து, 64 ஜின்­னிங் மில் உரி­மை­யா­ளர்­கள், ‘இந்­தி­யன் டெக்ஸ்­பி­ர­னர்ஸ்’ கூட்­ட­மைப்­பின் (ஐ.டி.எப்.,) அழைப்பை ஏற்று, கோவை வந்­து உள்­ள­னர்.

ஐ.டி.எப்.,பில் உள்ள, 32 மில்­கள் இணைந்து, ‘காட்­டன் டீம்’ என்ற குழுவை உரு­வாக்­கி உள்­ள­னர். இவர்­களின் மில்­க­ளுக்கு தேவை­யான பஞ்சை, மஹா­ராஷ்­டிரா, தெலுங்­கானா, கர்­நா­டக மாநி­லங்­களில் உள்ள, 64 ஜின்­னிங் மில்­களில் இருந்து மொத்­த­மாக கொள்­மு­தல் செய்­கின்­ற­னர். அந்த ஜின்­னிங் மில்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள், கோவை வந்து, இங்­குள்ள ஸ்பின்­னிங் மில்­களின் செயல்­பா­டு­களை நேரில் பார்த்து தெரிந்து கொண்­ட­னர். பஞ்­சின் தரத்தை மேம்­ப­டுத்­து­வது குறித்­தும், ஐ.டி.எப்., அமைப்­பு­டன் ஆலோ­சனை நடத்­தி­னர்.

கோவை, ‘ரெசி­டென்ஸி’ ஓட்­ட­லில் நடந்த பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பில், ஐ.டி.எப்., ஒருங்­கி­ணைப்­பா­ளர், பிரபு தாமோ­த­ரன் கூறி­ய­தா­வது: உல­க­ள­வில் இந்­திய பருத்தி மிக­வும் தரம் வாய்ந்­தது. ஆனால், பருத்தி எடுக்­கும், சுத்­தப்­ப­டுத்­தும் நடை­மு­றை­க­ளால், அதன் தரம் குறை­கிறது.பருத்தி எடுக்­கும்­போ­தும், ஜின்­னிங் மில்­க­ளுக்கு கொண்டு வரும்­போ­தும், விவ­சா­யி­களின் கவ­னக்­கு­றை­வால், பிற பொருட்­கள் அதில் கலந்­து­ வி­டு­கின்றன.

ஜின்­னிங் மில்­களின் சுத்­தப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­க­ளி­லும், அவை முற்­றி­லும் அகற்­றப்­ப­டு­வது இல்லை. இதன் கார­ண­மாக, அனைத்து ஜவுளி மதிப்பு கூட்­டும் பொருட்­களின் தர­மும் பாதிப்­புக்கு உள்­ளா­கிறது. எனவே, பஞ்­சின் தரத்தை மேம்­ப­டுத்­து­வது குறித்து விவ­சா­யி­க­ளுக்கு விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­த­வும், ஜின்­னிங் தொழில் நுட்­பத்தை மேம்­ப­டுத்­த­வும் முயற்சி மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கிறது. நம் பஞ்­சின் தரத்தை மேம்­ப­டுத்­து­வ­தன் மூலம், இந்­திய ஜவுளி பொருட்­க­ளுக்கு, சர்­வ­தேச சந்­தை­யில் இன்­னும் மதிப்பு கூடும்; நம் வர்த்­த­க­மும் மேம்­படும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை