உரிமம் பெறாத உணவகங்களுக்கு கிடுக்கிப்பிடி; 10 வலைதள நிறுவனங்கள் பட்டியலில் இருந்து நீக்க உத்தரவு

தினமலர்  தினமலர்
உரிமம் பெறாத உணவகங்களுக்கு கிடுக்கிப்பிடி; 10 வலைதள நிறுவனங்கள் பட்டியலில் இருந்து நீக்க உத்தரவு

புதுடில்லி : உரி­மம் இன்றி செயல்­படும் உண­வ­கங்­களை, சேவைப் பட்­டி­ய­லில் இருந்து உட­ன­டி­யாக நீக்­கு­மாறு, வலை­த­ளம் வாயி­லாக உணவு வழங்­கும் சேவை­யில் ஈடு­பட்­டுள்ள, 10 நிறு­வ­னங்­க­ளுக்கு, உணவு பாது­காப்பு மற்­றும் தரக் கட்­டுப்­பாட்டு ஆணை­ய­மான – எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

தற்­போது, வலை­த­ளம் மூலம், விரும்­பிய ஓட்­டல்­களில் இருந்து வித­வி­த­மான உணவு வகை­களை வீட்­டிற்கே வர­வ­ழைத்து உண்­போர் எண்­ணிக்கை பெருகி வரு­கிறது.இதற்கு, மொபைல் போனில், ‘ஆர்­டர்’ கொடுத்த அரை மணி நேரத்­தில், கூடு­தல் கட்­ட­ண­மின்றி, சுடச் சுட உணவு வகை­கள், ‘சப்ளை’ செய்­யப்­ப­டு­வது தான், முக்­கிய கார­ணம்.

இவ்­வகை சேவை­யில், ‘ஸொமாட்டோ, உபர்­ஈட்ஸ்’ போன்ற மின்­னணு சந்தை நிறு­வ­னங்­கள் ஈடு­பட்­டுள்ளன. இவை, உண­வ­கங்­களில் இருந்து உண­வைப் பெற்று, நுகர்­வோ­ரின் வீட்­டிற்கே சென்று கொடுக்­கின்றன.

ஒப்பந்தம் :
இதற்­காக, இந்­நி­று­வ­னங்­கள், பல்­வேறு உண­வ­கங்­க­ளு­டன் ஒப்­பந்­தம் செய்து, குறிப்­பிட்ட தொகையை சேவை கட்­ட­ண­மாக பெற்­றுக் கொள்­கின்றன.சமீப கால­மாக, வலை­தள நிறு­வ­னங்­கள் சப்ளை செய்­யும் உணவு வகை­கள் குறித்த புகார்­கள் அதி­க­ரித்­துள்ளன. தர­மற்ற உணவு வகை­கள் வழங்­கப்­ப­டு­வ­தாக, நாடு முழு­வ­தி­லும் இருந்து ஏரா­ள­மான புகார்­கள், நுகர்­வோர் நல அமைச்­ச­கத்­தில் குவிந்து வரு­கின்றன.

மோச­மான சூழ­லில், சுகா­தா­ர­மற்ற சமை­யற்­கூ­டத்­தில் உணவு வகை­கள் தயா­ரிக்­கப்­ப­டு­வது தான், புகார்­கள் எழக் கார­ணம் என, கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து, நுகர்­வோ­ரின் ஆரோக்­கிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லாக உள்ள, இப்­பி­ரச்­னைக்கு தீர்வு காண, வலை­த­ளங்­கள் வாயி­லாக உணவு சேவை­யில் ஈடு­பட்­டுள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு, புதிய விதி­மு­றை­களை, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

அதன்­படி, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உரி­மம் பெற்ற உண­வ­கங்­க­ளு­டன் தான், வலை­த­ளம் வாயி­லாக உணவு சப்ளை செய்­யும் நிறு­வ­னங்­கள், ஒப்­பந்­தம் செய்ய வேண்­டும். மேலும், வலை­த­ளத்­தில் உண­வ­கங்­களை பட்­டி­ய­லி­டும்­போது, அவற்­றின் உரிம எண்­க­ளை­யும் பதிவு செய்ய வேண்­டும் என்­பது உள்­ளிட்ட விதி­மு­றை­கள் அம­லுக்கு வந்­தன.

தரமான உணவு :
ஆனால், சில வலை­தள நிறு­வ­னங்­கள் இந்த விதி­களை மீறி, உரி­மம் பெறாத உண­வ­கங்­க­ளை­யும் பட்­டி­ய­லிட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது. இதை­ய­டுத்து, ஸொமா ட்டோ, புட்­பாண்டா உள்­ளிட்ட, 10 மின்­னணு உண­வுச் சேவை நிறு­வ­னங்­க­ளுக்கு, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., கடி­தம் அனுப்­பியுள்­ளது.

அதில், ‘உரி­மம் பெறாத உண­வ­கங்­களை, பட்­டி­ய­லில் இருந்து உட­ன­டி­யாக நீக்க வேண்­டும்; உரி­மம் பெற்ற உண­வ­கங்­களின் பட்­டி­ய­லை­யும், அவற்­றின் உரி­மம் மற்­றும் ஒப்­பந்த நகல்­களை, வரும், 31ம் தேதிக்­குள் வழங்க வேண்­டும்’ என, தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நட­வ­டிக்­கை­யால், நுகர்­வோ­ருக்கு பாது­காப்­பான, தர­மான உணவு கிடைக்க வழி ஏற்­படும் என, சமூக ஆர்­வ­லர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

எந்தெந்த நிறுவனங்கள்?
புட் கிள­வுட், புட்­மிங்கோ, புட்­பாண்டா, பாக்ஸ்–8, ஜஸ்­புட், லைம்ட்ரே, ஸ்விக்கி, உபர்­ஈட்ஸ், ஸொமாட்டோ, பாஸோஸ் ஆகிய, 10 நிறு­வ­னங்­க­ளுக்கு, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உரி­மம் பெறாத உண­வ­கங்­களின் சேவையை நிறுத்த உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை