'நரகாசூரன்' வெளியீடு பற்றி கேட்ட அனுராக் காஷ்யப்

தினமலர்  தினமலர்
நரகாசூரன் வெளியீடு பற்றி கேட்ட அனுராக் காஷ்யப்

தமிழ் சினிமாவில் உள்ள திறமைசாலிகளை மனதாரப் பாராட்டும் குணம் கொண்டவர் ஹிந்தித் திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப். தமிழில் வெளியாகும் பல நல்ல படங்களைப் பார்க்கும் வழக்கம் கொண்டவர். எந்தவிதமான பந்தாவும் இல்லாமல் அவர்களை சமூக வலைத்தளங்களில் பாராட்டுவார்.

பாராட்டுக்களுடன் அவர் மனதில் பட்டதையும் வெளிப்படையாகச் சொல்லும் பழக்கம் உடையவர். சமீபத்தில் கூட இயக்குனரும், நடிகருமான சசிகுமார் மீண்டும் படம் இயக்க வேண்டும் என்று கூறியவர். தற்போது நயன்தாரா நடிக்கும் 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

'துருவங்கள் 16' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன், அவருடைய அடுத்த படமான 'நரகாசூரன்' படம் சென்சார் பெற்றதை டுவிட்டரில் தெரிவித்திருந்தார். அந்த டுவிட்டில் அனுராக் காஷ்யப், “உங்கள் முதல் படமான 'துருவங்கள் 16' படத்தின் ரசிகன் நான், படம் எப்போது வெளிவருகிறது” என்று கேட்டிருந்தார். அனுராக்கின் பதிவால் கார்த்திக் நரேன் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

'நரகாசூரன்' படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை