அங்கமாலி டைரீஸ் இயக்குனரின் புதிய படம் ஜல்லிக்கட்டு

தினமலர்  தினமலர்
அங்கமாலி டைரீஸ் இயக்குனரின் புதிய படம் ஜல்லிக்கட்டு

மலையாள திரையுலகிலும் அறிவுஜீவிகள் என அறியப்படும் சில இயக்குனர்களில் லிஜோ ஜோஸ் பள்ளிசேரியும் ஒருவர். கடந்த வருடம் இவரது டைரக்சனில் வெளியான 'அங்கமாலி டைரீஸ்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப்படத்தில் புதிய முயற்சியாக, கதாநாயகன் - நாயகி என 84 புதுமுகங்களை வைத்து இயக்கி புதிய சாதனை செய்திருந்தார். அதை தொடர்ந்து இந்த வருடம் 'ஈ ம யூ' (ஈஷோ-மரியம்-யூசுப்) என்கிற படத்தை ரிலீஸ் செய்த இவர், தற்போது தான் புதிதாக இயக்கவுள்ள படத்திற்கு ஜல்லிக்கட்டு என டைட்டில் வைத்துள்ளார்.

ஜல்லிக்கட்டு என்றதும் ஜல்லிக்கட்டு பற்றியதோ, தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை பற்றியதோ என நினைத்துவிட வேண்டாம். இது மாவோயிஸ்ட்டுகள் பற்றிய கதை. ஒரு மாவோயிஸ்ட் எப்படி உருவாகிறான் என்பதை இரண்டு எருதுகளின் கண்ணோட்டத்தில் கதையாக சொல்ல இருக்கிறாராம் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. அங்கமாலி டைரீஸ் படத்தில் தான் அறிமுகப்படுத்திய ஆண்டனி வர்கீஸ் மற்றும் திமிற புகழ் விநாயகன் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்க உள்ளனராம்.

மூலக்கதை