பெண்கள் நல அமைப்பு தேவையில்லாத ஒன்று : மம்தா மோகன்தாஸ்

தினமலர்  தினமலர்
பெண்கள் நல அமைப்பு தேவையில்லாத ஒன்று : மம்தா மோகன்தாஸ்

கடந்த வருடம் கேரளாவில் நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளானதை தொடர்ந்து, திரையுலகில் உள்ள பல்வேறு அமைப்புகளில் உள்ள பெண்களையும் இணைத்து சினிமா பெண்கள் நல அமைப்பை (WCC) துவங்கினார்கள் சில நடிகைகள்.. இதில் மஞ்சு வாரியார், பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்தனர்.

அந்த நடிகை பிரச்சனையில் சிக்கி சிறை சென்றுவந்த நடிகர் திலீப்பை தற்போது நடிகர் சங்கத்தில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கத்தில் குழப்பம் விளைவித்து வரும் வேலையையும் இந்த அமைப்பு செய்து வருகிறது.

ஆனால் நடிகை மம்தா மோகன்தாஸ் இந்த பெண்கள் நல அமைப்பில் சேரவில்லை.. இதுகுறித்து சமீபத்தில் கூறியுள்ள மம்தா, "பெண்கள் நல அமைப்பு என்கிற ஒன்று தேவை என நான் நினைக்கவில்லை. அதனால் நான் சேரவில்லை" என்று கூறியுள்ளார்.

மேலும் நடிகை கடத்தல் விவகாரத்தை பற்றி கேட்டபோது, "எந்த ஒரு பிரச்சனையும் சிலரை பொறுத்தவரை அவர்களாகவே உருவாக்கி கொள்வது தான்" என எந்த தயக்கமும் இன்றி பதில் கூறியுள்ளார் மம்தா மோகன்தாஸ்.

மூலக்கதை