ஜூலை 15 மற்றும் 16 - பரிசில் சேகரிக்கப்பட்ட 4,650 தொன் குப்பைகள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஜூலை 15 மற்றும் 16  பரிசில் சேகரிக்கப்பட்ட 4,650 தொன் குப்பைகள்!!

உலக்கோப்பை இறுதி போட்டி இடம்பெற்ற நாளில் பரிசில் இருந்து 4,650 தொன்கள் எடையுள்ள குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஜூலை 15  மற்றும் 16 ஆகிய இரு நாட்களில் இந்த குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. பிரான்ஸ்-குரோசியா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டியை காண சோம்ப்ஸ் எலிசேயில் மக்கள் கூடியதோடு, மறுநாள் வெற்றியோடு திரும்பிய வீரர்களை காண மீண்டும் சோம்ப்ஸ்-எலிசேயில் கூட்டம் கூடியது. வெற்றிக்கொண்டாட்டங்களில் வீதிகளில் போடப்பட்ட குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன. மொத்தமாக பரிசுக்குள் மாத்திரம் 4,650 தொன்கள் குப்பைகள் சேகரிக்கப்பட்டன. இது கடந்த 2017 ஆம் ஆண்டைக் காட்டிலும் 11 வீதம் (500 தொன்கள்) அதிகமாகும். 
 
இரசிகர்கள் ஆரவார மிகுதியில் பொதுச்சொத்துக்களை சேதமாக்கியும், பேரூந்துக்களின் கண்ணாடிகளை உடைத்தும், கடைகளை உடைத்தும், மது போத்தல்களை வீதியில் போட்டு உடைத்தும் பெரும் வன்முறையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சேகரிக்கப்பட்ட குப்பைகளில் பெரும் பகுதி சோம்ஸ்-எலிசே பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும்.

மூலக்கதை