எய்ட்ஸ் மரணம்: இந்தியாவில் குறைந்தது

தினமலர்  தினமலர்
எய்ட்ஸ் மரணம்: இந்தியாவில் குறைந்தது

ஐக்கிய நாடுகள்: கடந்த 2010ல் இருந்ததை விட 2017 ல் எச்ஐவியால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் எய்ட்ஸ் நோயால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை, இந்தியாவில் குறைந்துள்ளதாக ஐ.நா., கூறியுள்ளது.
இது தொடர்பாக ஐ.நா., வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2010 முதல் 2017 வரையில், எய்ட்ஸ் பாதிப்பு குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக, இந்தியா, கம்போடியா, மியான்மர், தாய்லாந்து, வியாட்நாம் நாடுகளில் எச்ஐவி பாதிப்பு, எய்ட்ஸ் மரணங்கள் ஆகியவை குறைந்துள்ளன. அதே நேரத்தில், இந்த எண்ணிக்கை பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் அதிகரித்து வருகிறது.
கடந்த 2010ல் இந்தியாவில் எச்ஐவியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1,20,000லிருந்து 88 ஆயிரமாக குறைந்துவிட்டது. இதே காலகட்டத்தில், எய்ட்ஸ் பாதிப்பால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை 160,000 லிருந்து 90 ஆயிரமாக குறைந்துவிட்டது. எச்ஐவி பாதிப்புடன் வாழ்பவர்களின் எண்ணிக்கையும் 2,300,000லிருந்து 2,100,000 ஆக குறைந்துவிட்டது. இந்தியாவில் எச்ஐவியை கட்டுப்படுத்த, சமூக பாதுகாப்பு திட்டங்கள், கொள்கை மற்றும் செயல்திட்டம் ஆகியவை அமல்படுத்தப்பட்டன என கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை