ஓட்டல் ஊழியர்களுக்கு 16 லட்சம் ரூபாய் டிப்ஸ் கொடுத்த ரொனால்டோ...

தினகரன்  தினகரன்
ஓட்டல் ஊழியர்களுக்கு 16 லட்சம் ரூபாய் டிப்ஸ் கொடுத்த ரொனால்டோ...

கிரீஸ்: விருந்தோம்பலில் வியந்து 16 லட்சம் ரூபாயை டிப்ஸ் ஆக கொடுத்து ஓட்டல் நிர்வாகத்தினரை ஆச்சரியப்படுத்தியுள்ளார் ரொனால்டோ. கால்பந்தாட்டத்தில் சூப்பர் ஸ்டாராக கருதப்படுபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்றுடன் போர்ச்சுகல் அணி வெளியேறியது. கடந்த 9 வருடங்களாக ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் கிளப்புக்காக விளையாடி வந்த இவர், சமீபத்தில் அதிலிருந்து விலகி இத்தாலியின் ஜுவான்டஸ் கிளப்பில் விளையாட ஒப்பந்தமாகி உள்ளார். இதற்காக அவருக்கு 4 வருடத்திற்கு 800 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தனது காதலி மற்றும் குடும்பத்துடன் தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸூக்கு சுற்றுலா சென்றார். அங்கு கோஸ்டா நவரினோ என்ற ஆடம்பர நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். ஓட்டல் நிர்வாகத்தின் விருந்தோம்பலில் மெய் சிலிர்த்த  ரொனால்டோ  செக் அவுட் செய்யும் போது, டிப்ஸாக மட்டும் 17 ஆயிரத்து 850 யூரோவை கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். ஓட்டல் நிர்வாகத்தால் கூட நம்ப முடியவில்லை தெரிஞ்சுதான் கொடுத்திருக்கிறாரா?  என்று சந்தேகம். தெரிந்தே கொடுத்திருக்கிறேன் என்றபடி புன்னகையுடன் விடைபெற்றிருக்கிறார். அவர் கொடுத்த யூரோவின் இந்திய மதிப்பு 16 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை