வன்முறையில் ஈடுபட்ட ஜனாதிபதியின் மெய்காவலர்! - சூடுபிடிக்கும் விவகாரம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
வன்முறையில் ஈடுபட்ட ஜனாதிபதியின் மெய்காவலர்!  சூடுபிடிக்கும் விவகாரம்!!

கடந்த மே 1 ஆம் திகதி, மேதின கூட்டத்தில் அரச எதிர்ப்பாளர் இருவரை மிக மோசமாக தாக்கியதாக ஜனாதிபதியின் மெய்பாதுகாவலர் Alexandre Benalla இடை பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். தற்போது இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
மே 1 ஆம் திகதி, பெண் ஒருவரையும், ஆண் ஒருவரையும் மிக மோசமாக உணவகம் ஒன்றின் முன்னால் வைத்து சக காவல்துறை அதிகாரிகள் இருக்கும் போது, மிக மோசமாக தாக்கியுள்ளார். பெண்ணை தரையில் இழுத்துச் சென்றுள்ளார். இதை தடுக்க வந்த மற்றொரு நபரையும் மோசமாக தாக்கியுள்ளார். இதை நபர் ஒருவர் காணொளியாக்கியுள்ளார். தற்போது இணையத்தில் வேகமாக பரவி வரும் இந்த காணொளி மீண்டும் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டததாக முன்னர் இருவாரங்களுக்கு ஊதியம் இல்லாத இடை பணி நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அவர் பணியை தொடர்ந்து வருகின்றார். 
 
தற்போது, இந்த காணொளி கடந்த புதன்கிழமை வெளியானதைத் தொடர்ந்து, நேற்று மீண்டும் விசாரணைகளை ஆரம்பிக்க கோரப்பட்டுள்ளது. தேசிய சட்டமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இது தொடர்பான மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

மூலக்கதை