ரஷ்யா - அமெரிக்க உறவை குலைத்து லாபம் தேட சில சக்திகள் முயற்சிக்கின்றன : விளாடிமிர் புடின்

தினகரன்  தினகரன்
ரஷ்யா  அமெரிக்க உறவை குலைத்து லாபம் தேட சில சக்திகள் முயற்சிக்கின்றன : விளாடிமிர் புடின்

மாஸ்கோ: அதிபர் டொனால்டு டிரம்புடன் நடைபெற்ற சந்திப்பை விமர்சிக்கும் அமெரிக்கர்களை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கண்டித்துள்ளார். பின்லாந்தில் நடைபெற்ற ரஷ்ய - அமெரிக்க நாட்டு தலைவர்களின் உச்சி மாநாடு முடிவுகளை இந்த விமர்சகர்கள் குறைத்து மதிப்பிட முயல்வதாக புடின் குற்றம் சாட்டியுள்ளார். உச்சிமாநாடு மாபெரும் வெற்றி என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ள புடின் 2-வது சந்திப்புக்கு காத்திருப்பதாக கூறியுள்ளார். பின்லாந்தில் புடினை சந்தித்து பேசிய பிறகு அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிடவில்லை என்று டிரம்ப் கூறியது சர்ச்சைக்குள்ளானது. அமெரிக்காவில் கடும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டது. செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் ரஷ்யா கடந்த காலத்தில் செய்ததை போல மீண்டும் அமெரிக்க தேர்தலில்  தலையிடாமல் பார்த்துக்கொள்ள தீவிர நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் எடுத்து வருவதாக தெரிவித்தார்.

மூலக்கதை