டெஸ்ட் ஹாக்கி: நியூசிலாந்தை வென்றது இந்தியா

தினகரன்  தினகரன்
டெஸ்ட் ஹாக்கி: நியூசிலாந்தை வென்றது இந்தியா

பெங்களூரு: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஹாக்கி தொடரின் முதல் போட்டியில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.இந்தியா-நியூசிலாந்து ஹாக்கி அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பெங்களூருவில் நடக்கிறது. இதில் முதல் போட்டி நேற்று நடந்தது. ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ரூபிந்தர் பால் சிங் 2, 34வது நிமிடங்களில் 2 கோல் அடித்து அசத்தினார். மன்தீப் சிங் 15வது நிமிடத்திலும், ஹர்மன்பிரீத் சிங் 38வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். நியூசிலாந்து தரப்பி–்ல் ஸ்டீபன் ஜென்னஸ் (26, 55) மட்டுமே 2 கோல் அடித்து அந்த அணிக்கு ஆறுதல் அளித்தார். இறுதியில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது. 2வது போட்டி நாளை மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.

மூலக்கதை