அமெரிக்க அரசியலில் ரஷ்யாவின் தலையீட்டை ஒடுக்க நடவடிக்கை: வெள்ளைமாளிகை

தினகரன்  தினகரன்
அமெரிக்க அரசியலில் ரஷ்யாவின் தலையீட்டை ஒடுக்க நடவடிக்கை: வெள்ளைமாளிகை

வாஷிங்டன்: அமெரிக்க அரசியலில் ரஷ்யா தொடர்ந்து தலையிட்டு வருவதாக வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் நிகழ்ந்தது போல ரஷ்யா அமெரிக்க தேர்தல்களில் தலையிடாத வண்ணம் நடவடிக்கை எடுத்து வருவதாக வெள்ளைமாளிகை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ரஷ்யா மீண்டும் அமெரிக்க தேர்தலில் தலையிட முயற்சிக்கும் என அதிபர் டிரம்ப் எண்ணுவதாகவும், அப்படி நிகழாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாகவும் அவர் கூறினார்.  டிரம்புக்கு எதிராக போராட்டம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக வெள்ளை மாளிகைக்கு வெளியே 3-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. பின்லாந்தில் கடந்த திங்கட்கிழமை அமெரிக்க அதிபர் டிரம்பும் ரஷ்ய அதிபர் புதினும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் புதினுடனான சந்திப்பின்போது டிரம்ப் தெரிவித்த கருத்துக்களுக்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புதினுடனான சந்திப்பை டிரம்ப் முறையாக அணுகவில்லை என கூறி வெள்ளைமாளிகைக்கு வெளியில் 3-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. 

மூலக்கதை