வலதிலிருந்து இடப்புறமாக சுற்றும் கடிகாரத்தை பயன்படுத்தும் குஜராத் பழங்குடியினர்

தினகரன்  தினகரன்
வலதிலிருந்து இடப்புறமாக சுற்றும் கடிகாரத்தை பயன்படுத்தும் குஜராத் பழங்குடியினர்

குஜராத்: குஜராத்தின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர், வலதிலிருந்து இடப்புறமாக சுற்றும் கடிகாரத்தை பயன்படுத்திவருகின்றனர். தங்களின் நம்பிக்கைப்படி நிலப்பகுதி இதுபோன்ற சுழற்சி முறையிலேயே சுற்றுவதாகவும், அதனால் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கூட ஆண்டி கிளாக் வைஸ் எனப்படும் எதிர்திசையில் வட்டமிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். மேலும் அந்த கடிகாரத்தின் மத்தியில் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.குஜராத்தின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மத்தியில் நீண்ட கால நம்பிக்கையாக இருந்து வருகிறது. லால்சிங் காமித்(40), தபி மாவட்டம் வலோத் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின போராளியாக இருக்கும் இவர், ’ஆதிவாசி கடிகாரங்களை’(ஆதிவாசி காதிஸ்) உருவாக்கி வருகிறார். இது அங்குள்ள பழங்குடியின மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 10,000 - 15,000 கடிகாரங்கள் விற்று தீர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை