சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு ஒப்புதல்.... யூத நாடாகிறது இஸ்ரேல்

தினகரன்  தினகரன்
சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு ஒப்புதல்.... யூத நாடாகிறது இஸ்ரேல்

ஜெருசலேம்: இஸ்ரேலை யூத நாடாக அறிவிக்கும் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டப்படி ஒருங்கிணைந்த ஜெருசலேம் நகர் இஸ்ரேலின் தலைநகராக அறிவிக்கப்படுகிறது. அதேபோல் அதிகாரப்பூர்வ மொழிகள் பட்டியலில் இருந்து அரபி நீக்கப்படுகிறது. இந்த மசோதா இஸ்ரேலின் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தபோது அதற்க்கு அரபு எம்.பி,க்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 62 பேரும் எதிராக 55 பேரும் வாக்களித்ததால் மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. 90 லட்சம் மக்கள் தொகை கொண்ட இஸ்ரேலில் 20% பேர் அரபியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டப்படி அவர்களுக்கு சம உரிமை இருந்தாலும், இரண்டாம் தர குடிமக்களாக தாங்கள் நடத்தப்படுவதாகவும், இன பாகுபாடுகளை தாங்கள் எதிர்க்கொள்வதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மூலக்கதை