பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் இம்ரான் கான்-நவாஸ் ஷெரிஃப் இடையே கடும் போட்டி நிலவும்: வல்லுநர்கள் கணிப்பு

தினகரன்  தினகரன்
பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் இம்ரான் கான்நவாஸ் ஷெரிஃப் இடையே கடும் போட்டி நிலவும்: வல்லுநர்கள் கணிப்பு

லாகூர்: பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் இம்ரான் கான் கட்சிக்கும், நவாஸ் ஷெரிஃப் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என கூறப்படுகிறது. வரும் 25-ம் தேதி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானின் தெக்ரிக் இ இன்சாப் கட்சிக்கும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபின் முஸ்லீம் லீக் கட்சிக்கும் இடையில் தான் கடுமையான போட்டி நிலவும் என அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்புகள் கூட இரண்டு கட்சிகளுக்கும் இடையே போட்டி கடுமையாக இருக்கும் என்பதை காட்டுவதாக சொல்லப்படுகிறது. நவாஸ் கட்சியின் கோட்டையான பஞ்சாப் மாகாணத்தில் இம்ரான் கானின் கட்சி அதிக இடங்களை கைப்பற்றினால் அவர் ஆட்சியமைக்கவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

மூலக்கதை