உலக அமைதி ஓட்டத்தில் ஏழு கண்டத்தின் 72 நாடுகளில் ஓடும் தமிழர் சுரேஷ்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
உலக அமைதி ஓட்டத்தில் ஏழு கண்டத்தின் 72 நாடுகளில் ஓடும் தமிழர் சுரேஷ்

 

சுரேஷ் ஜோச்சிம் (Suresh Joachim), ஏற்கனவே  கின்னஸ் சாதனையை  நிகழ்த்தியுள்ளவர்,  உலக அமைதிக்காக 7  கண்டங்களில் 72 நாடுகளில் 123 நகரகங்களில்  அமைதி மராத்தான் ஓட்டத்தை (WORLD PEACE MARATHON 2017 - 2018 ) தொடங்கியுள்ளார்.  இந்த தொடர் மராத்தான் ஓட்டம்  பெத்தலேகம் நகரில் கடந்த டிசம்பர் 25,2017-ல் ஆரம்பித்து இன்று சூலை 18, 2018  அமெரிக்காவின் வாசிங்டன் நகரில் நகருக்கு வந்தடைந்தார்.  வாசிங்டன் டிசி-யில் அவரை சந்தித்து வாழ்த்திய வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவையின் தலைவரும், முன்னால் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத் தலைவருமான திரு.சுந்தர் குப்புசாமி, சூலை 18, 2018  புதன்கிழமை (இன்று) மாலை நடைபெறும்  அவர் தொடர் ஓட்ட நிகழ்ச்சியில் மாலை 5:30 மணிக்கு யூனியன் ஸ்டேசன் ( Union Station) பகுதியில் ஆரம்பிக்கும் அவரது ஓட்டம் கான்ஸ்ட்டிடுஷன் அவென்யு (constitution avenue) , இன்டிபண்டன்ட் அவென்யு (independence avenue) பகுதிகளில் தொடர்கிறது ..  பல்வேறு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியுள்ள இவரது இந்த 72 நாடுகளில் 123 நகரகங்களில் முடியும்போது இவர் உலக அமைத்திக்கான உலக சாதனையாக பதிவுசெய்யப்படும் என்று எத்ர்ப்பார்க்கப்படுகிறது . No Poverty No Disease No War என்ற முழக்கத்துடன் இந்த மிகப்பெரிய மராத்தான் உலக ஓட்டத்தை தொடரும் திரு.சுரேஷ் அவரது தொடர் ஓட்டம் குறித்த தகவல்களை அவரது  www.worldpeacemarathon.com இணையதளத்தில்  காணலாம்.  இந்த தொடர் ஓட்டம் கனடாவில் வரும் செப்டம்பர் 22,2018-ல் (BETHLEHEM DECEMBER 25, 2017 TO CANADA SEPTEMBER 22, 2018) நிறைவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

சுரேஷ் ஜோச்சிம் (Suresh Joachim), ஏற்கனவே  கின்னஸ் சாதனையை  நிகழ்த்தியுள்ளவர்,  உலக அமைதிக்காக 7  கண்டங்களில் 72 நாடுகளில் 123 நகரகங்களில்  அமைதி மராத்தான் ஓட்டத்தை (WORLD PEACE MARATHON 2017 - 2018 ) தொடங்கியுள்ளார்.  இந்த தொடர் மராத்தான் ஓட்டம்  பெத்தலேகம் நகரில் கடந்த டிசம்பர் 25,2017-ல் ஆரம்பித்து இன்று சூலை 18, 2018  அமெரிக்காவின் வாசிங்டன் நகரில் நகருக்கு வந்தடைந்தார்.  வாசிங்டன் டிசி-யில் அவரை சந்தித்து வாழ்த்திய வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவையின் தலைவரும், முன்னால் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத் தலைவருமான திரு.சுந்தர் குப்புசாமி, சூலை 18, 2018  புதன்கிழமை (இன்று) மாலை நடைபெறும்  அவர் தொடர் ஓட்ட நிகழ்ச்சியில் மாலை 5:30 மணிக்கு யூனியன் ஸ்டேசன் ( Union Station) பகுதியில் ஆரம்பிக்கும் அவரது ஓட்டம் கான்ஸ்ட்டிடுஷன் அவென்யு (constitution avenue) , இன்டிபண்டன்ட் அவென்யு (independence avenue) பகுதிகளில் தொடர்கிறது .. 


பல்வேறு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியுள்ள இவரது இந்த 72 நாடுகளில் 123 நகரகங்களில் முடியும்போது இவர் உலக அமைத்திக்கான உலக சாதனையாக பதிவுசெய்யப்படும் என்று எத்ர்ப்பார்க்கப்படுகிறது . No Poverty No Disease No War என்ற முழக்கத்துடன் இந்த மிகப்பெரிய மராத்தான் உலக ஓட்டத்தை தொடரும் திரு.சுரேஷ் அவரது தொடர் ஓட்டம் குறித்த தகவல்களை அவரது  www.worldpeacemarathon.com இணையதளத்தில்  காணலாம். 


இந்த தொடர் ஓட்டம் கனடாவில் வரும் செப்டம்பர் 22,2018-ல் (BETHLEHEM DECEMBER 25, 2017 TO CANADA SEPTEMBER 22, 2018) நிறைவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

-வாசிங்டன் டிசி யிலிருந்து வலைத்தமிழ் நிருபர் இலக்கியன் 

மூலக்கதை