நவம்பர் 13 தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவித்து €20,000 மோசடி! - பெண்ணுக்குச் சிறை!!

PARIS TAMIL  PARIS TAMIL
நவம்பர் 13 தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவித்து €20,000 மோசடி!  பெண்ணுக்குச் சிறை!!

நவம்பர் 13 பயங்கரவாத தாக்குதலில் தாம் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டு தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றில் €20,000 வரை பணமோசடி செய்த பெண் ஒருவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 
 
Alexandra D. எனும் குறித்த பெண் கடந்த ஜூலை 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். Fonds de Garantie அமைப்பிடம் இருந்து நஷ்ட்ட ஈடாக 20,000 யூரோக்கள், ஜனவரி 2016 இல் இருந்து மே 2017 வரையான காலப்பகுதிக்குள் பெற்றுக்கொண்டுள்ளார். நவம்பர் 13 தாக்குதலில் காயமடைந்தவர்களை புகைப்படக்கலைஞர் ஒருவர் உடலில் பச்சை (Tattoos)  வரைந்து புகைப்பட எடுத்தார். அந்த பட்டியலில் குறித்த பெண்ணும் இடம்பெற, அப்பெண்ணை புகைப்படக்கலைஞர் நேர்காணல் செய்தார். ஆனால் குறித்த பெண் முரணான தகவல்களை தெரிவிக்க, குறித்த பெண் விசரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார். 
 
தனது தோழி ஒருவருடன் இசை நிகழ்ச்சி பார்க்கச் சென்றதாகவும், தாக்குதலில் அவர் உயிரிழந்துவிட்டதாகவும், தன் மேல் carillon எனும் இசை கருவி பொருத்தப்படும் இராட்சத கம்பி தன்மேல் விழுந்ததாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் விசாரணைகளில் அவை அனைத்தும் பொய் என உறுதி செய்யப்பட்டுள்ளதது. அதன் பின்னரே அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளர். நவம்பர் 13 தாக்குதலில் காயமடைந்ததாக தெரிவித்து போலியாக பணம் பெற்றுக்கொண்டதால் இதுவரை 16 பேர் சிறையிலடைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை