முதன் முறையாக - பொது பயன்பாட்டுக்கு வரும் சிறிய உலங்குவானூர்தி?!!

PARIS TAMIL  PARIS TAMIL
முதன் முறையாக  பொது பயன்பாட்டுக்கு வரும் சிறிய உலங்குவானூர்தி?!!

பிரான்சில் முதன் முறையாக தனிநபர் தேவைக்காக சிறியரக உலங்குவானூர்திகள் விற்பனைக்கு வர உள்ளது. பொது மக்கள் அலுவலகங்களுக்குச் செல்ல இதை பயன்படுத்த முடியும். 
 
Eva எனும் நிறுவனம் ((Electric Visionary Aircrafts) இந்த புதிய ஒருவர் மாத்திரமே அமரக்கூடிய சிறிய ரக உலங்குவானூர்தியை வடிவமைத்துள்ளது. மகிழுந்து போன்று தரிப்பிடத்தில் நிறுத்தி, பின்னர் அதில் பறந்து அலுவலகம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த உலங்குவானூர்தி நின்ற நிலையில் இருந்து மேலே செங்குத்தாக உயரம் எனவும், தரிப்பிடத்தில் இறக்கியதும் இறக்கைகள் தானாக மடித்துக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அலுவலகங்களுக்குச் செல்லுபவர்கள் நேரத்தை மிச்சப்படுத்தலாம் எனவும், வீதி போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
350 மீட்டர்கள் உயரத்தில் இருந்து 1000 மீட்டர்கள் வரை பயணிக்கவேண்டிய தூரத்தை பொறுத்து உயரத்தை அதிகரித்துக்கொள்ளலாம். அதிகபட்சமாக மணிக்கு 300 கி.மீ வேகம் வரை பயணிக்கலாம் எனவும், இதன் விலை €250,000 யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன் முதலாக இந்த சேவை Toulouse நகரில் சேவைக்கு வர உள்ளது. 

மூலக்கதை