நிரவ்மோடியை கைது செய்ய சிங்கப்பூர் விரைந்த அதிகாரிகள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நிரவ்மோடியை கைது செய்ய சிங்கப்பூர் விரைந்த அதிகாரிகள்

சிங்கப்பூர்: பஞ்சாப் நேஷனல் வங்கியில், பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும், ரூ. 13,000  கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்ததுவிட்டு, இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டனர்.

இதுதொடர்பாக, சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன. இவ்விவகாரத்தில் தொடர்புடைய நீரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்சி, சகோதரர் நிஷால் மோடி, நிரவின் மனைவி ஆமி மோடி, ஊழியர் சுபாஷ் பராப்  ஆகியோர் கைது நடவடிக்கைக்கு பயந்து, பிரிட்டன், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் இருப்பதாக கூறப்படுகிறது.தொடர்ந்து, நிரவ் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக இன்டர்ேபால் அமைப்பு, ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கி, அவர்களை தேடி வருகிறது. இந்நிலையில், நிரவ்  மோடியை தேடிப் பிடிக்க அமலாக்கத் துறை சிறப்புக் குழு சிங்கப்பூர் விரைந்துள்ளது.

வழக்கு தொடர்பான விவரங்களை அந்நாட்டு அரசுடன் பகிர்ந்து கொள்ளவும்,  அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருவதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

.

மூலக்கதை