2019-ல் பா.ஜ. மீண்டும் வெற்றி பெற்றால் நாடு ஹிந்து பாகிஸ்தானாக மாறும்: தரூர் சர்ச்சை பேச்சு

தினமலர்  தினமலர்
2019ல் பா.ஜ. மீண்டும் வெற்றி பெற்றால் நாடு ஹிந்து பாகிஸ்தானாக மாறும்: தரூர் சர்ச்சை பேச்சு

திருவனந்தபுரம்: 2019- தேர்தலில் மீண்டும் பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் நாடு, ஹிந்து பாகிஸ்தான் என மாறிவிடும் என காங். மூத்த தலைவர் சசிதரூர் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசினார்.காங். மூத்த தலைவர் சசிதரூர், கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியது, 2019-ம் ஆண்டு மத்தியில் நடக்க உள்ள தேர்தலில் பா.ஜ.மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு ஹிந்து-பாகிஸ்தான் என மாறிவிடும். நமது நாட்டின் ஜனநாயக அரசியலமைப்பு சிதைந்து போய்விடும். புதிதாக அரசியலமைப்பு ஒன்றை நாம் உருவாக்கவேணடியிருக்கும் என்றார்.
சசிதரூரின் பேச்சுக்கு பா.ஜ. கண்டனம் தெரிவித்துள்ளது, பா.ஜ. செய்தி தொடர்பாளர் சமிதா பத்ரா கூறுகையில், பேராசையின் காரணமாக பாகிஸ்தான் என்ற நாட்டை உருவாக்கியது காங். கட்சி தான். சசிதரூரின் சர்ச்சை பேச்சு ஹிந்து ராஷ்டிராவை அவமதிப்பு போல உள்ளது என்றார்.
சசிதரூரின் பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது. தரூர் சர்ச்சை பேச்சிற்கு தார்மீக பொறுப்பேற்று காங்.தலைவர் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் எனறனர்.

மூலக்கதை