பிஎஸ்என்எல் புது முயற்சி இன்டர்நெட் மூலம் அழைப்பு வசதி

தினகரன்  தினகரன்
பிஎஸ்என்எல் புது முயற்சி இன்டர்நெட் மூலம் அழைப்பு வசதி

புதுடெல்லி : இன்டர்நெட் மூலம் போன் நம்பர்களுக்கு பேசும் வசதியை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்ய இருக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் விங்ஸ் என்ற மொபைல் ஆப்சை அறிமுகம் செய்ய இருக்கிறது. இன்டர்நெட்பை பயன்படுத்தி, நாட்டின் எந்த ஒரு இடத்திலும் உள்ள தொலைபேசி எண்ணுக்கு இந்த ஆப்ஸ் மூலம் அழைப்புகள் மேற்கொள்ள முடியும். ஆனால் முதற்கட்டமாக, இந்த ஆப்சில் இருந்து இதே ஆப்ஸ் நிறுவியுள்ள மற்றொருவருக்கு அழைக்கும் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹா கூறுகையில், தற்போதைய போட்டி சூழலில் பிஎஸ்என்எல்லின் சந்தாதாரர் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இன்டர்நெட் மூலம் சிம்கார்டு இல்லாமலேயே பேசும் வசதி வருகிறது’’ என்றார். அதாவது, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்களது பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் வை-பை பயன்படுத்தி எந்த ஒரு நெட்வொர்க்கிலும் உள்ள எண்ணுக்கு அழைக்கலாம். உரிமம் பெற்ற நிறுவனங்கள் ஆப்ஸ் மூலம் வை-பை இணைப்பை பயன்படுத்தி குரல் அழைப்பு சேவை வழங்க தொலைத்தொடர்பு துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த சேவைக்காக பதிவு செய்யும் நடைமுறைகள் ஒரு வாரத்தில் துவங்கும் எனவும், வரும் 25ம் தேதி முதல் சேவை செயல்பாட்டுக்கு வரும் எனவும் பிஎஸ்என்எல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை