பிரான்சை பின்னுக்கு தள்ளியது பொருளாதார வளர்ச்சியில் 6வது இடத்தில் இந்தியா : உலக வங்கி தகவல்

தினகரன்  தினகரன்
பிரான்சை பின்னுக்கு தள்ளியது பொருளாதார வளர்ச்சியில் 6வது இடத்தில் இந்தியா : உலக வங்கி தகவல்

புதுடெல்லி : இந்தியா பொருளாதாரம் உலக அளவில் 6வது இடத்தை பிடித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக பொருளாதாரம் குறித்து உலக வங்கி ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் 2017ம் ஆண்டில் இந்தியா 6வது இடத்தை பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த இடத்தில் இருந்த பிரான்ஸ் 7வது இடத்துக்கு சென்றுவிட்டது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பு 2.59 லட்சம் கோடி டாலர். பிரான்ஸ் ஜிடிபி மதிப்பு 2.58 லட்சம் கோடிடாலர். முதலிடத்தில் அமெரிக்கா நீடிக்கிறது. இதன் ஜிடிபி 19.36 லட்சம் கோடி டாலர். இதற்கு அடுத்த இடங்களில் சீனா (2), ஜப்பான் (3), ஜெர்மனி (4) உள்ளன. 5வது இடத்தில் இங்கிலாந்து உள்ளது. அடுத்த ஆண்டு இந்த இடத்தை இந்தியா பிடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டில் இந்திய பொருளாதாரம் 2 மடங்கு உயர்ந்துள்ளது. பிரேசில் (8), இத்தாலி (9), கனடா (10)வதுஇடங்களை பிடித்துள்ளன. பிரான்ஸ் பின்னுக்கு சென்றாலும், அதன் மக்கள் தொகை 6.7 கோடி மட்டுமே. ஆனால் இந்திய மக்கள் தொகை 135 கோடி. இத்துடன் ஒப்பிடுகையில் தனிநபர் வருவாய் பிரான்சில் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை