வாடிக்கையாளர்களுக்கு பஜாஜ் ஆட்டோ 3 சலுகைகள்

தினகரன்  தினகரன்
வாடிக்கையாளர்களுக்கு பஜாஜ் ஆட்டோ 3 சலுகைகள்

சென்னை : பஜாஜ் ஆட்டோ நிறுவனம்,  இலவச காப்பீடு உட்பட 3 சலுகைகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பஜாஜ் ஆட்டோ, 3 இன் 1 ஹாட்ரிக் சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. கடந்த 1ம் தேதி துவங்கிய இந்த சலுகை இந்த மாதம் 31ம் தேதி வரை மட்டுமே கிடைக்கும். முதலாவது சலுகையாக, பிளாட்டினா, டிஸ்கவர், பல்சர் 150, பல்சர் என்எஸ்160, வி ரக மோட்டார் சைக்கிள் வாங்குவோருக்கு ஓராண்டு இலவச காப்பீடு கிடைக்கும். 2வது சலுகையாக, புதிய சிடி100, பிளாட்டினா, டிஸ்கவர், பல்சர் என்எஸ், அவெஞ்சர், பல்சர் ஆர்எஸ், டாமினார் ரக பைக் வாங்குவோருக்கு 2 ஆண்டு இலவச சேவை கிடைக்கும். மூன்றாவது சலுகையாக, எந்த பஜாஜ் வாடிக்கையாளராக இருந்தாலும், மேற்கண்ட கால அளவுக்குள் முதல் முறையாக கூடுதல் செலவு ஏதுவும் இன்றி 5 ஆண்டு வாரண்டி தொகுப்பு பெறலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து பஜாஜ் டீலர்களிடமும் இந்த சலுகை கிடைக்கும். இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ மோட்டார் சைக்கிள் பிசினஸ் தலைவர் எரிக் வாஸ் கூறுகையில், ‘இந்த புதிய திட்டங்கள் மழைக்காலத்தில் எங்கள் விற்பனையை பெருக்க உதவும்’ என்றார்.

மூலக்கதை